மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!'
4 comments:
அருமை ராஜ்
// மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன் ................ //
அடேய் கரும்பார மண்டையா ... எங்கிருந்துடா காப்பி அடுச்ச............................
இதுக்கு ஒரு எரும வேற..... ச்சி!.... sorry அரும வேற.............
நல்லா இருக்குங்க கவிதை.
Post a Comment