மாறுவேட போட்டி

இன்று ஈரோட்டில் நடைபெற்ற மாறுவேட போட்டியில் பங்கு பெற்று கலக்கியவர்கள்.

விஷால்


போட்டோ எடுத்தவர் நம்ம L போர்டுதாங்க

முடியாத காதல் கதை

" ஹலோ வணக்கம்.... நான் பிரியா பேசுறேன். நீங்க யாரு பேசுறது ? "
" நா திண்டிவணத்துல இருந்து ஷோபா பேசுறேன் "
" சொல்லுங்க ஷோபா... எப்படி இருக்கீங்க..? "
"நா நல்ல இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க...?"
"யம்மாடி...ஆத்தாடி. உன்ன என்னக்கு தரியாடி...!!"
" கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி தூத்திக்குடி..."
" நீங்கள் பார்த்துக் கொண்டு இருப்பது........"


" ச்சே..." - கோபத்துடன் என் கையில் இருந்த ரிமோட்டை தூக்கி வீசினேன்.
இசையருவி, சன் மீயூசிக், ஜெயா மீயூசிக், ராஜ் மீயூசிக் என்று தமிழில் இருக்கும் எல்லா இசை சேனல்களை போட்டு பார்த்துவிட்டேன். நான் எதிர்பார்க்கும் அந்த விஷயம் மட்டும் இன்னும் வரவில்லை. மூன்று ஆண்டுகளாக என் மனதில் அலைமோதிய ஆசை. என் கல்லூரி படிப்பு தொடங்கி இன்று வரை ஒவ்வொரு நொடியும் நான் அனு அனுவாய் செத்ததற்கு பலன். என் வாழ்க்கையில் வரும் சந்தோஷம் எல்லாம் தமிழ் இசை சேனல்களில் எதோ ஒன்றில் தான் இருக்கிறது.


பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று என்று என் காதலை நினைக்க வேண்டாம். என் காதல் வித்தியாசமானது. முடிவில்லாதது. என் காதலை கதையை பற்றி எத்தனை முறை கூறினாலும், எனக்கு அலுப்பு தட்டுவதில்லை. நீங்களும் ஒவ்வொரு முறை புதிதாய் கேட்பது போல் உணர்வீர்கள். என் காதல் நீங்கள் முடிக்க நினைத்தாலும் இதில் நீங்கள் தொலைந்து போவீர்கள். சிறு பயத்தை வைத்துக் கொண்டு என் காதல் கதையை கேளுங்கள்...


என் மூன்று வருட தவத்தை இன்று தான் அவளிடம் சொன்னேன். அவள் பெயர் அமுதா. எனக்கென்று பிறந்த தேவதை. எனக்காவே வடிவமைத்து பிரம்மன் செதுக்கி பூமியில் பிறக்க வைத்த தேவதை. அவள் மீது யார் ஆசை வைத்தாலும் தெய்வ குத்தமாகிவிடும். என்னக்காக அவளை கடவுள் அவளை படைத்த போது, மற்றவர்கள் அவளை சகோதரியாக தான் பார்க்க வேண்டும். என் கோபத்தை விட, கடவுளின் கோபத்திற்கு நிச்சயம் எல்லோரும் பயப்படுவீர்கள். அதனால், என் அமுதாவை நீங்கள் சகோதரியாக பாருங்கள். இப்படி, என் கல்லூரியில் படிப்பவர்களை மிரட்டி இருக்கிறேன். நான் நல்லவன் என்று காட்டிக் கொள்ள நண்பர்களிடம் கெஞ்சியிருக்கிறேன். ஆனால், அவளிடம் மட்டும் பேச ஒரு வார்த்தை கூட வரவில்லை. இன்று தான் என் மௌனத்தை கலைத்தேன். என் அமுதாவை இல்லை... தேவதையை அழைத்து தனியாக பேசினேன்.


" மூணு வஷமா நா உன்ன லவ் பண்ணுறேன். அது உனக்கே நல்லா தெரியும். நம்ம படிப்பு கெட்டு போக கூடாது தான் இதுவரைக்கும் சொல்லலை.. ஐ லவ் யூ அமுதா..."
அமுதா எதுவும் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
" என்ன அமுதா.. சொன்னதுக்கு பதிலே சொல்லல்ல..."
" கொஞ்சம் டைம் கொடு... அப்புறம் பதில் சொல்லுறேன்.."
" எப்போ...எவ்வளவு நாள் ?"


மூன்று வருடங்களாக சொல்ல காத்திருந்த என் இதயத்திற்கு, என் காதலை சொன்ன பிறகு காத்திருக்க முடியவில்லை. அவளிடம் இருந்த பதில் வர போகும் நாட்களை என்ன வேண்டுமா என்று மனம் பதறியது.


" ரொம்ப டைம் எடுத்துக்க மாட்டேன். இன்னைக்கு ஒன்பது மணிக்குள்ள சொல்லுறேன்..."
" உனக்கு போன் பண்ணட்டா..."
" இல்ல வேண்டாம். நா எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்..."
இவ்வளவு பெரிய விஷயத்த எஸ்.எம்.எஸ் அனுப்புறேன் சொல்லுறா... என்ன பண்ணுறது..


" காதல் வந்துவிட்டால்

Missed Call கொடுத்து காதலை தொலைப்பவர்கள் : பெண்கள்

! Out-going செய்துகாதலை தக்கவைத்து கொள்பவர்கள் : ஆண்கள் !!"


புது கவிதை மனதில் எழுதிக் கொண்டேன். என் காதல் உறுதியாகும் வரை இது போன்ற கவிதையில் என் காதலை சிதைத்துவிட விரும்பவில்லை.


" என் நம்பர் உனக்கு தெரியுமா..."
" உன் செல்போனுக்கு இல்ல... தமிழ் மீயூசிக் சசேனலுக்கு ஏதாவது ஒண்ணுக்கு அனுப்புவேன்.."
" என்ன சேனல் சொல்லு...."
" அது தான் சஸ்பென்ஸ்... என் பதில் ஏதாவது ஒரு தமிழ் சேனல்ல வரும்... பாரு !"


இன்றே என் காதல் தேர்வுக்கு முடிவு தெரிய போவதை நினைத்து சந்தோஷப்படுவதா ? எந்த சேனலில் பதில் வரும் என்று தெரியாமல் விழிப்பதா ? ஒன்றும் புரியவில்லை. தன் காதலுக்கு முடிவு சொல்ல... இப்படி ஒரு உத்தியை கொண்டுவந்தது என் அமுதாவாக தான் இருக்கும்.
ஒவ்வொரு சேனலிலும் யார் யாரோ அனுப்பிய தகவல் வந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், என் அமுதா அனுப்பியதை இவர்கள் ஒளிப்பரப்ப நேரமாகுமா... வேறு ஏதாவது தமிழ் சேனலாக இருக்குமா என்று இன்னொரு சந்தேகம். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு சேனலை மாற்றிக் கொண்டு வருகிறேன். என் அமுதா அனுப்பியது போல் எந்த பதிலும் வந்ததாக தெரியவில்லை.


ஒவ்வொரு நிமிடமும் டைம் பாம் நேரம் கடப்பது போல் இருந்தது.
ஒரு சேனலில் தொலைப்பேசி மணி ஒலித்தது. என் கவனம் முழுக்க சேனல் கீழ் வரும் பதிலை எதிர்பார்த்து இருந்தது.


அந்த சேனல் தொகுப்பாளர் பிரியா போனை எடுத்து பேசினாள்...


மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்......!)

இவன்

ராஜேந்திரன்

கொல்கத்தா

நன்றி:தமிழோவியம்.காம்

காதலில் கவிதையில்லை...

உன் கவிதை வரிகளால் கட்டிப்போட்டாய்
நான் மயங்கிக்கிடந்த ஓர் வேளையில்
நீ காதலைச் சொன்னாய்-
நான் சிறு பறவையாய் தலையசைத்தேன்...

நீ கொஞ்சம் கொஞ்சமாய்
உன் கவிதைகளிலிருந்து மாறுபட்டாய்
உன் பொய்முகம் ரசிக்கமுடியவில்லை
காதலிலிருந்தும் வெளிவரமுடியவில்லை
அதுவும் தேவைப்பட்டது-
நீ சந்தர்ப்பங்களுக்காய் காத்திருந்தாய்..
நான் பருந்திடமிருந்து தப்பிக்கும் ஓர்
சிறுகுஞ்சாய்....

ஓர் எச்சரிக்கை உணர்வோடே நாம்
பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்
ஆது- தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஒத்திருந்து
நீ நேர்த்தியாய் அதைச்செய்தாய்..
நான் பலமுறைதோர்க்க ஆரம்பித்தேன்..

நான் எதி்ர்பார்த்ததைப்போல
என் பலவீனம் உன் பலமாய்
நீ என்னிலிருந்து விலகிப்போனாய்
நான் துடுப்பிழந்த படகானேன்

வெகு நாள் கழித்து
திடீரென ஓர் கவிதை
பாலையின் கொடும்மணல் சூட்டில் வந்துவிழுந்த
மழைத்துளியாய்- அங்குமீண்டும் ஓர்
கள்ளிச்செடி துளிர்க்காரம்பித்தது....

காதல் எல்லையில்லா பிரபஞ்சம்
கவிதை காதலிலிருந்ததது
காதல் கவிதையில்லை...


இவன்

ராஜேந்திரன்

கொல்கத்தா

நான் ரசித்தது

ஒரு அழகான சாஃப்ட்வேர் எஞ்ஜினியரும் அவனது ப்ராஜக்ட் மேனேஜரும் ஊட்டிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டியும் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரத்திலேயே நமது எஞ்ஜினியருக்கும், அந்த யுவதிக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது. உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.

ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

பாட்டி மனதிற்குள் நினைத்தார், "அந்த பையனுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு. என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா! ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்."

ப்ராஜக்ட் மேனேஜர் மனதிற்குள், "இந்த பயலுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோனலையே!! ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!"

அந்த பெண், "அந்த பையன் முத்தம் கொடுத்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு. அனா பாவம்! நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே!!"

நம்ம எஞ்ஜினியர் என்ன நினைச்சான் தெரியுமா? "வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா? ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னொட ப்ராஜக்ட் மேனேஜரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?"

தொடங்குமுன் முடிந்த காதல்

காலங்கள் கழிந்தன; காட்சிகள் மாறின

கரைந்துவிட்ட நினைவுகள், கனவாகிப்போன காதல்

காலையில் அலுவலுகம், மாலையில் வீடு

மருத்துப்போன மனம், மறந்துபோன மகிழ்ச்சி

உயிர்த்துடிப்பற்ற இதயம், செயற்கையாகிவிட்ட வாழ்க்கை

எல்லாம் போய்விட்டது, ஏதோ இருக்கிறேன்.