02 December 2008

நான் ரசித்தது

ஒரு அழகான சாஃப்ட்வேர் எஞ்ஜினியரும் அவனது ப்ராஜக்ட் மேனேஜரும் ஊட்டிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டியும் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரத்திலேயே நமது எஞ்ஜினியருக்கும், அந்த யுவதிக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது. உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.

ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

பாட்டி மனதிற்குள் நினைத்தார், "அந்த பையனுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு. என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா! ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்."

ப்ராஜக்ட் மேனேஜர் மனதிற்குள், "இந்த பயலுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோனலையே!! ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!"

அந்த பெண், "அந்த பையன் முத்தம் கொடுத்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு. அனா பாவம்! நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே!!"

நம்ம எஞ்ஜினியர் என்ன நினைச்சான் தெரியுமா? "வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா? ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னொட ப்ராஜக்ட் மேனேஜரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?"

5 comments:

varun said...

//ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னொட ப்ராஜக்ட் மேனேஜரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?//
:))

Unknown said...

ROTFL :)))

KARTHIK said...

ராசு கதை நல்லாருக்கு இதுக்குத்தாம்ப்ப பசங்ககிட்ட கொஞ்சம் அனுசரிச்சு நடக்கனும்கறது இப்பப்பாரு..........

KARTHIK said...

அந்த அழகான பொண்ணு யாரு அந்த கொல்டியா

ராஜேந்திரன் said...

//அந்த அழகான பொண்ணு யாரு அந்த கொல்டியா //

Illa Anna, Still Searching and Searching