Showing posts with label மென்பொருள் வல்லுனன். Show all posts
Showing posts with label மென்பொருள் வல்லுனன். Show all posts

13 February 2008

மென்பொருள் வல்லுனன்



எழுந்துவிட்ட அதிகாலை,

எழுப்பிவிட்ட கடிகாரம்,

காத்திருக்கும் கடமை ,

இன்னும் உறங்கும் நண்பன் ,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர் ,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர் ,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள் ,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு ,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன் ,

நாளைய காலையின் விழிப்பிலாவது
தாயின் , " மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு" எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு .....



இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

மென்பொருள் வல்லுனன் .
(பொருளை தேடுவதில் வாழ்க்கையை தொழைத்த வல்லுனன் )


ராஜேந்திரன்
கொல்கத்தா