" பொங்கல் நல் வாழ்த்துக்கள்"
"பூக்களை மட்டுமேபூஜிக்கும்
பூமியில்வேர்களுக்குக்கிளைகள் எடுக்கும்கலை விழா"
"மோதிரங்களின் தாலாட்டில்விரல்களைமறந்து
விட்டவர்களுக்குபாதங்கள் நடத்தும்பாராட்டு விழா"
"தனக்குத் தானியம் தந்தவயல்களுக்குவரப்புகள்
விரிக்கும்வாழ்த்து விழா"
"பணப்பை கள் பார்க்கத் தவறியகலப்பைகளுக்கு,கிராமச்
சாலைகள் நடத்தும்கோலாகல விழா"
"நாடுகள்கிரீடப் போட்டிக்கு கவசங்களோடு
அலைய,இங்கேமாடுகளின் தலையில்முடிசூட்டு
விழா நடக்கும்"
"தங்கத் தட்டுகளை வெறுத்துசெங்கல் மீதில்திங்களைப்
பார்த்துபொங்கல் பானைபொங்கிச் சிரிக்கும்"
"நம்பிக்கைகளை நன்றாகியபச்சைக்குகும்மிக்கைகள்
ஒன்றாகிகுதுகெலமாய் நன்றி சொல்லும்"
"நல்ல நிலத்தில்விதை விழுந்தால்,ஆயிரம் விதைகள்
பயிராகும்எனகளஞ்சியங்கள்
ஒப்புக்கொண்டுகையெழுத்திடும் "
"வாருங்கள்,அனுபவக் கலப்பைகள்உழுது முடித்த
உள்ளத்துள்நல்லெண்ண விதைகளைஆழமாய்
ஊன்றுவோம்"
இப்படிக்கு
சிவசங்கர் விஸ்வநாதன்
சுகன்யா சிவசங்கர்
இப்படிக்கு
சிவசங்கர் விஸ்வநாதன்
சுகன்யா சிவசங்கர்
ஹர்ஷிதா சிவசங்கர்
4 comments:
//"நாடுகள்கிரீடப் போட்டிக்கு கவசங்களோடு அலைய,இங்கேமாடுகளின் தலையில்முடிசூட்டு விழா நடக்கும்"//
பொங்கல் ஒரு இனிமையான தமிழர் திருவிழாங்க...
உங்களனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அண்ணா லைன் பை லைனா போட்டிருந்தா கவிதை மாதிரி வந்திருக்கும்
உங்களுக்கும் புதுவரவானா வாரிசுக்கும் அண்ணிக்கும் என்னோடா வாழ்துக்கள சொல்லிருங்க :-))
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
GOOD KEEP IN UP jai
Post a Comment