10 April 2008

குத்திக் காட்டியது - என் தமிழ்

குத்திக் காட்டியது - என் தமிழ்

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!


தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!


நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!


காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!


கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!


மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!


இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன்


குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்


இவன்
ராஜேந்திரன்

கொல்கத்தா

6 comments:

GanesanK said...

very good one, aana tamilil yeppadi type seitheergal...even my comment im wondering to make in tamil. Tare care.

FunScribbler said...

நல்லா இருக்குப்பா! கலக்கல்ஸ்!!

KARTHIK said...

//மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!//

நம்ம ஊருல எங்கப்பா கடற்கரை இருக்கு

கவிதை நல்லாருக்கு

ராஜ் said...

sr

Sen22 said...

கவிதை நல்லா இருக்கு....



Senthil Kumar
Bangalore

பழனி said...

தங்கள் வலைப்பூவின் வாசகர்களுக்கு இக்கவிதையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் … மகிழ்கிறேன் ..
கவிதை இன்னாருடையது என்றும் அறிமுகப்படுத்தியிருந்தால் மிகவும் அகமகிழ்ந்திருப்பேன்.

நட்புடன்,
பழனி

http://en-kavithai.blogspot.com/2006/06/blog-post.html