13 February 2008
மென்பொருள் வல்லுனன்
எழுந்துவிட்ட அதிகாலை,
எழுப்பிவிட்ட கடிகாரம்,
காத்திருக்கும் கடமை ,
இன்னும் உறங்கும் நண்பன் ,
சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர் ,
இயந்திரம் தந்த இதமான வெந்நீர் ,
விரும்பிய இசைபாடும் குறுவட்டு,
சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,
இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,
எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள் ,
இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு ,
இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன் ,
நாளைய காலையின் விழிப்பிலாவது
தாயின் , " மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு" எனும் குரல் கேட்காதா
என்ற எதிர்பார்ப்போடு .....
இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,
மென்பொருள் வல்லுனன் .
(பொருளை தேடுவதில் வாழ்க்கையை தொழைத்த வல்லுனன் )
ராஜேந்திரன்
கொல்கத்தா
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
தம்பி கவிதயல்லாம் பின்னுறியே
ரொம்ப கஷ்டமா இருந்த ஈரோடு வந்துடு
கவிதை அருமை
ஆகா.. இன்னாமா கவித பின்னீட்டீங்க.. இம்மாம் டென்சனா கீரிங்களா மாமோய்
ராஜேந்திர உனது கவிதை நன்றாக உள்ளது உன்னைப்போல் ஊரை விட்டு பொருள் தேட சென்றவர்களின் மன உளைச்சல் என்னை மிகவும் பதித்து என்னென்றால் நானும் இந்த மன உளைச்சலால் ஒரு 7 ஆண்டுகளாக சிரமப்பட்டுள்ளேன்
இப்படிக்கு
சிவசங்கர்
மக்கா கலக்கிட்ட போ!!
வால்பையன்
In the last line is it "தொழைத்த" or "தொலைத்த"
Nanri...Kavithai Arumai
Post a Comment