05 January 2010

படித்ததில் பிடித்தது ...

1. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

2.
காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

3.
நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே , சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

4.
இவர்கள் ஏன் இப்படி ? என்பதை விட , இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

5.
யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர் கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

6.
நான் மாறும்போது தானும் மாறியும் , நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை அதற்கு என் நிழலே போதும்!

7.
உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

8.
ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
.

9.
நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

10.
பேசும்முன் கேளுங்கள் , எழுதும்முன் யோசியுங்கள் , செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

11.
சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு.
அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

12.
சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

13.
முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

14.
எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

15.
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.

16.
யார் சொல்வது சரி என்பதை விட , எது சரி என்பதே முக்கியம்

17.
பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.

18.
பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

19.
நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

20.
உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21.
உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

22.
வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23.
தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

25.
செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் அப்போது தான் முன்னேற முடியும்.

26.
அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27.
வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன் , இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28.
தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29.
பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல் , நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30.
கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31.
சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

32.
ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

இவன்

ராஜேந்திரன்

கொல்கத்தா

MPGUYS

06 March 2009

மாறுவேட போட்டி

இன்று ஈரோட்டில் நடைபெற்ற மாறுவேட போட்டியில் பங்கு பெற்று கலக்கியவர்கள்.
விஷால்


போட்டோ எடுத்தவர் நம்ம L போர்டுதாங்க

12 February 2009

முடியாத காதல் கதை

" ஹலோ வணக்கம்.... நான் பிரியா பேசுறேன். நீங்க யாரு பேசுறது ? "
" நா திண்டிவணத்துல இருந்து ஷோபா பேசுறேன் "
" சொல்லுங்க ஷோபா... எப்படி இருக்கீங்க..? "
"நா நல்ல இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க...?"
"யம்மாடி...ஆத்தாடி. உன்ன என்னக்கு தரியாடி...!!"
" கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி தூத்திக்குடி..."
" நீங்கள் பார்த்துக் கொண்டு இருப்பது........"


" ச்சே..." - கோபத்துடன் என் கையில் இருந்த ரிமோட்டை தூக்கி வீசினேன்.
இசையருவி, சன் மீயூசிக், ஜெயா மீயூசிக், ராஜ் மீயூசிக் என்று தமிழில் இருக்கும் எல்லா இசை சேனல்களை போட்டு பார்த்துவிட்டேன். நான் எதிர்பார்க்கும் அந்த விஷயம் மட்டும் இன்னும் வரவில்லை. மூன்று ஆண்டுகளாக என் மனதில் அலைமோதிய ஆசை. என் கல்லூரி படிப்பு தொடங்கி இன்று வரை ஒவ்வொரு நொடியும் நான் அனு அனுவாய் செத்ததற்கு பலன். என் வாழ்க்கையில் வரும் சந்தோஷம் எல்லாம் தமிழ் இசை சேனல்களில் எதோ ஒன்றில் தான் இருக்கிறது.


பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று என்று என் காதலை நினைக்க வேண்டாம். என் காதல் வித்தியாசமானது. முடிவில்லாதது. என் காதலை கதையை பற்றி எத்தனை முறை கூறினாலும், எனக்கு அலுப்பு தட்டுவதில்லை. நீங்களும் ஒவ்வொரு முறை புதிதாய் கேட்பது போல் உணர்வீர்கள். என் காதல் நீங்கள் முடிக்க நினைத்தாலும் இதில் நீங்கள் தொலைந்து போவீர்கள். சிறு பயத்தை வைத்துக் கொண்டு என் காதல் கதையை கேளுங்கள்...


என் மூன்று வருட தவத்தை இன்று தான் அவளிடம் சொன்னேன். அவள் பெயர் அமுதா. எனக்கென்று பிறந்த தேவதை. எனக்காவே வடிவமைத்து பிரம்மன் செதுக்கி பூமியில் பிறக்க வைத்த தேவதை. அவள் மீது யார் ஆசை வைத்தாலும் தெய்வ குத்தமாகிவிடும். என்னக்காக அவளை கடவுள் அவளை படைத்த போது, மற்றவர்கள் அவளை சகோதரியாக தான் பார்க்க வேண்டும். என் கோபத்தை விட, கடவுளின் கோபத்திற்கு நிச்சயம் எல்லோரும் பயப்படுவீர்கள். அதனால், என் அமுதாவை நீங்கள் சகோதரியாக பாருங்கள். இப்படி, என் கல்லூரியில் படிப்பவர்களை மிரட்டி இருக்கிறேன். நான் நல்லவன் என்று காட்டிக் கொள்ள நண்பர்களிடம் கெஞ்சியிருக்கிறேன். ஆனால், அவளிடம் மட்டும் பேச ஒரு வார்த்தை கூட வரவில்லை. இன்று தான் என் மௌனத்தை கலைத்தேன். என் அமுதாவை இல்லை... தேவதையை அழைத்து தனியாக பேசினேன்.


" மூணு வஷமா நா உன்ன லவ் பண்ணுறேன். அது உனக்கே நல்லா தெரியும். நம்ம படிப்பு கெட்டு போக கூடாது தான் இதுவரைக்கும் சொல்லலை.. ஐ லவ் யூ அமுதா..."
அமுதா எதுவும் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
" என்ன அமுதா.. சொன்னதுக்கு பதிலே சொல்லல்ல..."
" கொஞ்சம் டைம் கொடு... அப்புறம் பதில் சொல்லுறேன்.."
" எப்போ...எவ்வளவு நாள் ?"


மூன்று வருடங்களாக சொல்ல காத்திருந்த என் இதயத்திற்கு, என் காதலை சொன்ன பிறகு காத்திருக்க முடியவில்லை. அவளிடம் இருந்த பதில் வர போகும் நாட்களை என்ன வேண்டுமா என்று மனம் பதறியது.


" ரொம்ப டைம் எடுத்துக்க மாட்டேன். இன்னைக்கு ஒன்பது மணிக்குள்ள சொல்லுறேன்..."
" உனக்கு போன் பண்ணட்டா..."
" இல்ல வேண்டாம். நா எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்..."
இவ்வளவு பெரிய விஷயத்த எஸ்.எம்.எஸ் அனுப்புறேன் சொல்லுறா... என்ன பண்ணுறது..


" காதல் வந்துவிட்டால்

Missed Call கொடுத்து காதலை தொலைப்பவர்கள் : பெண்கள்

! Out-going செய்துகாதலை தக்கவைத்து கொள்பவர்கள் : ஆண்கள் !!"


புது கவிதை மனதில் எழுதிக் கொண்டேன். என் காதல் உறுதியாகும் வரை இது போன்ற கவிதையில் என் காதலை சிதைத்துவிட விரும்பவில்லை.


" என் நம்பர் உனக்கு தெரியுமா..."
" உன் செல்போனுக்கு இல்ல... தமிழ் மீயூசிக் சசேனலுக்கு ஏதாவது ஒண்ணுக்கு அனுப்புவேன்.."
" என்ன சேனல் சொல்லு...."
" அது தான் சஸ்பென்ஸ்... என் பதில் ஏதாவது ஒரு தமிழ் சேனல்ல வரும்... பாரு !"


இன்றே என் காதல் தேர்வுக்கு முடிவு தெரிய போவதை நினைத்து சந்தோஷப்படுவதா ? எந்த சேனலில் பதில் வரும் என்று தெரியாமல் விழிப்பதா ? ஒன்றும் புரியவில்லை. தன் காதலுக்கு முடிவு சொல்ல... இப்படி ஒரு உத்தியை கொண்டுவந்தது என் அமுதாவாக தான் இருக்கும்.
ஒவ்வொரு சேனலிலும் யார் யாரோ அனுப்பிய தகவல் வந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், என் அமுதா அனுப்பியதை இவர்கள் ஒளிப்பரப்ப நேரமாகுமா... வேறு ஏதாவது தமிழ் சேனலாக இருக்குமா என்று இன்னொரு சந்தேகம். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு சேனலை மாற்றிக் கொண்டு வருகிறேன். என் அமுதா அனுப்பியது போல் எந்த பதிலும் வந்ததாக தெரியவில்லை.


ஒவ்வொரு நிமிடமும் டைம் பாம் நேரம் கடப்பது போல் இருந்தது.
ஒரு சேனலில் தொலைப்பேசி மணி ஒலித்தது. என் கவனம் முழுக்க சேனல் கீழ் வரும் பதிலை எதிர்பார்த்து இருந்தது.


அந்த சேனல் தொகுப்பாளர் பிரியா போனை எடுத்து பேசினாள்...


மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்......!)

இவன்

ராஜேந்திரன்

கொல்கத்தா

நன்றி:தமிழோவியம்.காம்

30 December 2008

காதலில் கவிதையில்லை...

உன் கவிதை வரிகளால் கட்டிப்போட்டாய்
நான் மயங்கிக்கிடந்த ஓர் வேளையில்
நீ காதலைச் சொன்னாய்-
நான் சிறு பறவையாய் தலையசைத்தேன்...

நீ கொஞ்சம் கொஞ்சமாய்
உன் கவிதைகளிலிருந்து மாறுபட்டாய்
உன் பொய்முகம் ரசிக்கமுடியவில்லை
காதலிலிருந்தும் வெளிவரமுடியவில்லை
அதுவும் தேவைப்பட்டது-
நீ சந்தர்ப்பங்களுக்காய் காத்திருந்தாய்..
நான் பருந்திடமிருந்து தப்பிக்கும் ஓர்
சிறுகுஞ்சாய்....

ஓர் எச்சரிக்கை உணர்வோடே நாம்
பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்
ஆது- தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஒத்திருந்து
நீ நேர்த்தியாய் அதைச்செய்தாய்..
நான் பலமுறைதோர்க்க ஆரம்பித்தேன்..

நான் எதி்ர்பார்த்ததைப்போல
என் பலவீனம் உன் பலமாய்
நீ என்னிலிருந்து விலகிப்போனாய்
நான் துடுப்பிழந்த படகானேன்

வெகு நாள் கழித்து
திடீரென ஓர் கவிதை
பாலையின் கொடும்மணல் சூட்டில் வந்துவிழுந்த
மழைத்துளியாய்- அங்குமீண்டும் ஓர்
கள்ளிச்செடி துளிர்க்காரம்பித்தது....

காதல் எல்லையில்லா பிரபஞ்சம்
கவிதை காதலிலிருந்ததது
காதல் கவிதையில்லை...


இவன்

ராஜேந்திரன்

கொல்கத்தா